திடீரென டெல்லி செல்லும் அண்ணாமலை.. என்ன காரணமாக இருக்கும்?

0
159

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் நாடு முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட இருக்கிறார்.

எல்.முருகனின் இல்ல பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக அண்ணாமலை இன்று மாலை டெல்லிக்கு செல்லவுள்ளார். பொங்கல் விழாவில் பங்கேற்கும் அண்ணாமலை, நாளை பிரதமர் மோடி, அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கூட்டணி குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here