திருநெல்வேலி மழை பாதிப்பு: ரஜினிகாந்த் foundation சார்பில் நிவாரண பொருட்கள் விநியோகம்!

0
122

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண நிதி வழங்கி வரும் நிலையில் ரஜினிகாந்த் foundation சார்பில் பொதுமக்களுக்கு உணவு, பால் பவுடர் உள்ளிட்ட பொருள்களை வழங்கினர்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்களது வீடு, வாகனம் உள்ளிட்ட பொருள்களை இழந்து தங்களது வாழ்வாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் foundation சார்பில் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்க்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று உணவு பொட்டலங்கள், குடிநீர், பால் பவுடர், பிஸ்கெட் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு
நிவாரண பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here