தூத்துக்குடி மழை பாதிப்பு: களத்தில் இறங்கிய இயக்குநர் மாரிசெல்வராஜ்..!

0
164

Mari Selvaraj: தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற இயக்குநர் மாரிசெல்வராஜ் அங்குள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்களது வீடு, வாகனம் உள்ளிட்ட பொருள்களை இழந்து தங்களது வாழ்வாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது இயக்குநர் மாரிசெல்வராஜ் தூத்துக்குடியில் உள்ள கருங்குளம் என்ற கிராமத்திற்குச் சென்று நிலவரத்தை ஆய்வு செய்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், பொதுமக்களை மீட்பதில் சிரமமாக உள்ளது. மரங்கள், மாடிகளில் அமர்ந்துகொண்டு உதவிகளை நாடி பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர். ஆற்றில் தண்ணீர் வேகம் இருப்பதால் பல்வேறு கிராமங்களுக்குள் பொதுமக்களைத் தேடி செல்வதில் சிக்கல் உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம், கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துன்னர்” என கூறியுள்ளார். முன்னதாக நேற்று (டிச.18) இது குறித்து இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.

மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை. வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here