‘நான் என்ன ஊர் சுத்திட்டா இருக்கேன்’..! செய்தியாளர் கேள்விக்கு கடுப்பான உதயநிதி..!

0
230

திருநெல்வேலி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை என எடப்பாடி கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்கள் தங்களது வாழ்வாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்குச் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாதிப்புகளை கண்டறிந்து மீட்பு பணியில் ஈடுபட்டார். இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று கொண்டிருந்த உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது ஒருவர், “வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழ்நாடு அரசு மீட்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுகிறார், இது குறித்து உங்கள் பதில் என்ன?” என கேள்வி எழுப்பினார்.

இதனைக் கேட்டவுடன் ஆத்திரமடைந்த உதயநிதி ஸ்டாலின், “இப்போ நான் இங்க என்ன பண்ணிட்டு இருக்கேன்?.. ஊர் சுத்திட்டு இருக்கேனா?.. மீட்புப் பணியில் தானே ஈடுபட்டுட்டு இருக்கேன். அவங்க வேலை இல்லாம ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க. வரலாறு காணாத மழை பெய்திருக்கு, பெரிய அளவில பாதிப்புகள் நடந்துள்ளது, அமைச்சர்கள் எல்லோருமே களத்துல இறங்கி வேலை பாத்துட்டு இருக்கோம்” எனக் காட்டமாக பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here