நாளை பேருந்துகள் ஓடாது.. வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்துக் கழகம்..

0
195

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் கிடைக்கவில்லை. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 96 மாத அக விலைப்படி வழங்காமல் உள்ளது, அதனை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இது தவிர பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எந்த பணப் பலனும் 13 மாதமாக வழங்கப்படவில்லை, அதனை வழங்க வேண்டும், நான்கு மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தின.

அரசு செவி சாய்க்காததால் கடந்த 19ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின. இதையடுத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தவிர்க்க அமைச்சர் சிவசங்கர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அகவிலைப்படி உயர்வு வழங்குதல், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.

இதனால் ஜனவர் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தது. அதனைத் தொடர்ந்து இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இன்றைய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்னன.

போராட்டம் காரணமாக 100 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படாது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here