‘பாதிக்கப்பட மாணவியின் மருத்துவக் கனவை அரசு நனவாக்க வேண்டும்’ – திருமாவளவன் அறிக்கை..

0
170

பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக பலவரும் தங்களது கணடனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் பின்னர், திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அரசியல் செல்வாக்குள்ள குடும்பமெனினும், காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது என திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேவுள்ள திருநருங்குன்றம் கிராமம், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ரேகாவுக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

12ஆம் வகுப்பை முடித்துள்ள மாணவி, நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயிலும் கனவில் இருந்துள்ளார். அதற்காக அவர் வீட்டு வேலை செய்ய முடிவெடுத்து, திருவான்மியூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் முகவர் ஒருவர் மூலம் வீட்டுப் பணியாளராக வேலைக்கு சேர்ந்தார்.

வீட்டு உரிமையாளர் ஆண்ட்ரோ மதிவாணன் என்பவர் பல்லாவரம் தொகுதியைச் சார்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். அவரது மனைவி மெர்லின் என்பவர் தான், மாணவி ரேகாவைக் குரூரமாகக் கொடுமைப் படுத்தியுள்ளார் எனத் தெரிய வருகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி ரேகாவின் புகாரையடுத்து கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குள்ள குடும்பமெனினும், காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

பாதிக்கப்பட்ட ரேகாவுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி அளிக்க வேண்டிய இழப்பீட்டை வழங்கவேண்டும். அத்துடன், அவருடைய மருத்துவக் கல்விக்கான கனவை நனவாக்கிட ஆவன செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here