பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: 14 காளைகளை அடக்கி இளைஞருக்கு கார் பரிசு!

0
165

மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அந்த வகையில் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மொத்தம் 3ஆயிரத்து 677 காளைகளுடன், ஆயிரத்து 412 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தனர். இதில், ஆயிரம் காளைகளுடன், 700 மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர், பாலமேடு ஜல்லிக்கட்டில் 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து முதல் பரிசை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாவது இடம் தெரிவித்தார்.

தொடர்ந்து, கொந்தகை பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கார் பரிசு வழங்கப்படது.

சிறந்த காளையாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு என்பவரது காளை தேர்வு செய்யப்பட்டு, அந்த காளையின் உரிமையாளருக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: ‘திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here