பிரேமலதா விஜயகாந்தை சந்திக்கும் பியூஷ் கோயல்.. கூட்டணி குறித்து பேச வாய்ப்பு…

0
94

தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள தி.மு.க. மற்றும் எதிரில் உள்ள அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே வலுவாக அமைந்து வரும் கட்சி பா.ஜ.க. தான். தமிழ்நாட்டில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே தனது அணியை அமைக்க பா.ஜ.க. போராடி வருகிறது.

மேலும் தனது அணியின் வலுவை சேர்க்க தமிழ்நாட்டில் பா.ம.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை தன்னுடன் இணைக்க திட்டம் தீட்டி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பிரேமலதா விஜயகாந்த்தை நேரில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ள மத்திய மந்திரி பியூஷ்கோயல் நேற்று மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர், கட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, இன்றும் சென்னையில் உள்ள பியூஷ் கோயல், பா.ஜ.க. கூட்டணி குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளார்.

அதன் பிறகு, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று பிரேமலதா விஜயகாந்தை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here