புதிய ஜல்லிக்கட்டு மைதானம்.. போட்டியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்..

0
153

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தன.

கடந்த வாரம் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா நடைபெறவுள்ளது. ஜனவரி கடைசியில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.

இந்த நிலையில், மதுரை கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அன்றைய தினம் அங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பிற்பகல் 12 மணி முதல் நாளை மறுநாள் பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://madurai.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்கள், காளைகள் குறித்த விவரங்களை வரும் 20ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here