பெரியார் கேலிச்சித்திரம் விவகாரம்: பாஜகவை விமர்சித்த காயத்ரி ரகுராம்..!

0
145

Periyar Issue: பெரியார் புகைப்படத்தை வைத்து கேலிச் சித்திரம் வரைந்தவர்களுக்கு எதிராக நடிகை காயத்ரி ரகுராம் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “பாஜக தங்களைப் பற்றியோ, அவர்களின் சாதனைகளைப் பற்றியோ, இந்துக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றியோ பாஜகவுக்கு எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் நாட்டிற்காக எதையும் செய்யவில்லை, தோல்வியடைந்தனர்.

பார்லிமென்ட் தாக்குதல் விவகாரம், ஈ.டி அங்கித் திவாரி விவகாரம், உ.பி. பாஜக எம்.எல்.ஏ 15 வயது சிறுமி பலாத்காரம் விவகாரம், ஆருத்ரா மோசடி விவகாரம், பாஜக தமிழக ரவுடிகள் விவகாரம்,

மத்திய அரசு வெள்ள நிவாரண தமிழக நிதி விவகாரம் என எதுவும் சொல்ல முடியாத நிலையில் திசைதிருப்ப பெரியார், நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தி அவர்களை பற்றி கேலி செய்கிறார்கள் அல்லது திட்டுகிறார்கள்” என கடுமையாக சாடியிருக்கிறார்.

முன்னதாக, பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்தும் காயத்ரி ரகுராம் பேசி வந்த நிலையில், பாஜகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் சமூக வலைதளப் பக்கங்களில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here