பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு

0
148

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று (ஜன.12) முதல் 11ஆயிரத்து 006 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

முன்னதாக 2ஆயிரத்து 100 அரசு விரைவு பேருந்துகளுடன் சேர்ந்து புதிதாக 4ஆயிரத்து 706 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

அதேபோல், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8ஆயிரத்து 478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் அரசு பேருந்துகளில் செல்ல இதுவரை தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. மேலும், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்ல 86ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here