சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை உள்ளது. குறைந்த கட்டணத்தில் விரைவான பயணம் செய்வதால் மக்கள் அதிகமானோர் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மின்சார ரயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 15, 16, 17ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.