பொங்கல் பண்டிகை: வெளியூர்களில் இருந்து சென்னைக்கு 6000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

0
176

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து படையெடுத்துச் சென்றனர். இதனால், சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டும் 3 நாட்களில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வெளியூர் பயணம் மேற் கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பண்டிகை முடிந்து இன்று மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்ப பயணத்தை தொடங்கிவிட்டனர். இதற்காக பல்வேறு நகரங்களில் இருந்து இன்று சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், வழக்கமாக இயக்கக் கூடிய 2ஆயிரத்து 100 பேருந்துகளில் 2ஆயிரம் சிறப்பு பேருந்துகள் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல, ஆயிரத்து 800 ஆம்னி பேருந்துகள் என மொத்தம் 6 ஆயிரம் பேருந்துகள் இன்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை இயக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here