பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
134

சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளன. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.239 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here