பொங்கல் விடுமுறை: சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசலில் சென்னை..

0
164

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று மாலை முதல் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதற்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் மூலம் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

இந்த நிலையில், தற்போது சொந்த ஊர் சென்ற மக்கள், பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று மாலை முதல் சென்னை திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்வதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், பெருங்களத்தூர் பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here