பொங்கல் விடுமுறை: மெட்ரோ ரயில்கள் சேவை குறித்த புதிய அப்டேட்..

0
137

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 15, 16, 17ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024ஆம் ஆண்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அதன்படி, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் இச்சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here