பொங்கல் விழா..! ஆட்டுக் கறி விருந்து.. கோழிக் கறி கூட்டு.. முனியாண்டி சாமி கோவிலில் குவிந்த மக்கள்..

0
178

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் புகழ்பெற்ற முனியாண்டி சாமி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், பொங்கலுக்கு மறுநாளான மாட்டு பொங்கல் அன்று பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், அசைவ அன்னதான விருந்து நடைபெறுவதும் வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டு கோபலாபுரம் முனியாண்டி சாமி கோவிலில் 61ஆவது பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த நிலையில், நேற்று காலை 250 பெண்கள் பால் குடம் எடுத்துச் சென்றனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை வைத்து அசைவ அன்னதானம் சமைக்கப்பட்டது. 60 மூட்டைகள் அரிசியில் தயாரான அசைவ உணவு நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த அன்னதானத்தில் அந்த கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் கோபாலபுரம் நாட்டாமை வீட்டிலிருந்து சாமிக்கு அபிஷேகம் செய்ய மலர்தட்டு ஊர்வலம் புறப்பட்டது.

இந்த மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர். பல பெண்கள் சாமியாடினர். மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here