‘பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை’ – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி!

0
142

தமிழ்நாட்டில் வருகிற மார்ச் மாதத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. அந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் முறையே மே மாதம் 10, 14, 6ஆம் தேதிகளில் வெளியிடப்படுகிறது.

இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள தேதிகளில் மாற்றமில்லை. தேர்வுக்கான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போல நாடாளுமன்ற தேர்தல் தேதி இருக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஊக்கத்தொகை உரிய நேரத்தில் கிடைக்காததால் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here