போகி பண்டிகை: சென்னையில் புகை மூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிப்பு..

0
62

தமிழ்நாட்டில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இதனால் சென்னையில் புகைமூட்டம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனால், இன்று அதிகாலை வேளையில் சராசரி அளவை விட புகைமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.

இந்த பனி மற்றும் புகைமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சென்னை நகர் முழுவதும் புகைமூட்டமாக இருப்பதால் விமான நிலையத்தில் விமான புறப்பாடு மற்றும் தரையிறங்குவதில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், தற்போது சென்னை விமான நிலையத்தில் 16 உள்நாட்டு விமான சேவைகளும், 8 வெளிநாட்டு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புகைமூட்டம் சீரான பிறகு விமான சேவைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here