போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்.. பேருந்துகள் இன்றி தவிக்கும் மக்கள்..

0
134

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் கிடைக்கவில்லை. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 96 மாத அக விலைப்படி வழங்காமல் உள்ளது.

அதனை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தினர். ஆனால், தமிழ்நாடு அரசு இதற்கு செவி சாய்க்காததால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

மேலும், போராட்டம் காரணமாக 100 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படாது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்தன.

அதன்படி நேற்று நள்ளிரவு முதலே அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கிய நிலையில், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால், வெளியூர்களுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேலை நிறுத்தப் போராட்டத்தால் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்படும் என வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரி மணவர்கள், பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here