போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வழக்கு.. நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை..

0
128

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் ஆஜராகி முறையீடு செய்தார்.

பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் இந்த தருணத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்ந்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணையை நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here