போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.. பணிக்கு வராதவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடக்கம்..

0
168

சென்னை: போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், சென்னை, மதுரை உள்பட முக்கிய மாவட்டங்களில் பேருந்துகள் இயக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்கள், ஊழியர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. மாவட்ட வாரியாகவும், போக்குவரத்துக் கோட்டம் வாரியாகவும் விவரங்களை சேகரிக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

மேலும், இயக்கப்படும் பேருந்துகளை முற்றுகையிடவோ, சிறைபிடிக்கவோ முயன்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.

அதனையும் மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை தொடர்ந்து பணிமனைகள், பேருந்து நிலையங்களை முற்றுகையிட தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ள நிலையில் போக்குவரத்துத்துறை எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here