போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.. தற்காலிக ஓட்டுநர்களுக்கு அரசு அழைப்பு..

0
189

போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் பேருந்துகள் இயங்காத நிலையில் பல இடங்களில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 97.7 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15 ஆயிரத்து 226 பேருந்துகளில் 14 ஆயிரத்து 888 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் மாநகர பேருந்துகள் 97.68 விழுக்காடு இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், அரசு பேருந்துகள் இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அசல் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளை அணுகலாம் என அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here