‘போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்’ – அமைச்சர் சிவசங்கர்

0
162

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இது குறித்து சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர் பேசுகையில், “பொதுமக்கள் அரசு பேருந்துகள், இடையூறின்றி பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. போராடுவது உங்கள் உரிமை. ஆனால் மக்களுக்கு இடையூறின்றி போராட வேண்டும்.

பொங்கல் பண்டிகை நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் மக்களுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 95 விழுக்காட்டிற்கும் மேல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அகவிலைப்படி தொகையை எடுத்து அதிமுக ஆட்சியில் வேறு செலவுகளை செய்துவிட்டனர். அரசியல் காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்களின் இரண்டு கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. அனைத்து தொழிலாளர்களும் கூடுதல் சம்பள உயர்வு பெற்று மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். போக்குவரத்து தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here