மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு!

0
131

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு பார்வையாளர்கள் வந்து செல்லும் வகையில் ரூ.22 கோடியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய சாலைகளும் அமைக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்விக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த மாத இறுதியில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார். திறப்பு விழா அன்று மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டுக்கு அடுத்த படியாக 4ஆவது ஜல்லிக்கட்டு போட்டியாக நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு உலக தரத்தில் இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். தென்னக மக்கள் பாராட்டும் வகையில் இந்த மைதானம் திறப்பு விழா நடைபெறும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here