மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 2ஆம் இடம் பிடித்த வீரர் அமைச்சர் மீது குற்றச்சாட்டு.. என்ன காரணம்?..

0
163

Alanganallur jallikattu: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாகுபாடு இருந்ததாக மாடுபிடி வீரர் குற்றம் சாட்டிய நிலையில், வெளிப்படை தன்மையுடன் தான் போட்டி நடைபெற்றதாக அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச் சுற்று, இதுவரை இல்லாத அளவிற்கு விறுவிறுப்பாக நடைபெற்றது. 10 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் 9ஆவது சுற்றின் முடிவில் 710 காளைகள் அவிழ்கப்பட்டிருந்தன.

இதில், மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் ஆகிய இருவரும் தலா 11 காளைகளை அடக்கி சம புள்ளிகளில் இருந்தனர். இதையடுத்து இறுதிச் சுற்று தொடங்கியது.

அதில், கார்த்திக்கும், அபிசித்தரும் அடுத்தடுத்து காளையை பிடித்து இருவரும் 14 காளைகள் என சமநிலையில் இருந்தனர். அதனைத் தொடர்ந்து கார்த்திக் 15ஆவது காளையை அடக்கியபோது அரங்கமே கரவொலியில் அதிரத் தொடங்கியது.

கார்த்திக் 16ஆவது காளையை பிடித்த சிறிது நேரத்திலேயே, அபிசித்தரும் மற்றொரு காளையை பிடித்து மீண்டும் சம நிலையில் இருந்தனர். இதையடுத்து, யார் முதலிடம் பிடிப்பார்கள் என அரங்கமே காத்திருந்த நிலையில் மீண்டும் இருவரும் ஆளுக்கொரு காளைகளை அடக்கினர்.

இறுதிச் சுற்றுக்கான கடைசி 5 நிமிடத்தில் அவிழ்க்கப்பட்ட மூன்றில் ஒரு காளையை கார்த்திக் பிடித்தார். இறுதியில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் பிடித்தார். இவர், 2022ஆம் ஆண்டில் நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தவர்.

அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 17 காளைகளை பிடித்த அபிசித்தர் இரண்டாவது இடத்தை பிடித்தார். இவரும், இதே அலங்காநல்லூரில் 2023ஆம் ஆண்டு நடந்த போட்டியில் முதல் பிடித்தார்.

அவருக்கு இரண்டாவது பரிசாக பைக் கொடுப்பதற்காக அழைத்தபோது, அவர் பரிசு பெற வராமல், போட்டியில் விதிமீறல் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டினார். மேலும், போட்டியில் நடைபெற்ற சூழ்ச்சி குறித்து வீடியோ ஆதாரங்களை வைத்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் கூறினார்.

இது குறித்து அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ‘விதிகளின் படியே போட்டி நடைபெற்றது. முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை” என தெரிவித்தார்.

இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், “களத்தில் நின்று கொண்டிருந்த சில மாடுகளால், காளைகளை அவிழ்ப்பதில் சுணக்கம் ஏற்பட்டது.

அதன் காரணமாகவே, இறுதிச் சுற்று தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. போட்டியாளர்கள் எவ்வளவு மாடுகளை பிடித்தார்கள் என்பதெல்லாம் அமைச்சருக்கு அப்போது தெரியாது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here