மழை வெள்ள பாதிப்பு: மோடியைச் சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

0
76

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து ஆலோசனை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளார்.

தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்திக்க நேரம் கோரியுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், விரைந்து நிதி ஒதுக்கக் கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவுள்ளார்.

இது குறித்து நாளை (19.12.2023) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here