மழை வெள்ள பாதிப்பு: தூத்துக்குடியில் நேரடியாக ஆய்வு செய்யும் மத்திய குழு..!

0
122

தூத்துக்குடி: தென் மாவட்ட பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 16ஆம் தேதி இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீட்புப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த கனமழை வெள்ளத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு இன்று (டிச.20) தூத்துக்குடி விரைந்துள்ளது.

விமானம் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் ஏ.பி.சிங் தலைமையில் விஜயகுமார், தங்கமணி, பொன்னுசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி சென்றனர்.

முன்னதாக அரசு அதிகாரிகளுடன் இந்த குழிவினர் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுக்கு பிறகு வெள்ள பாதிப்பு விவரங்களை மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here