மழை வெள்ள பாதிப்பு: மோடியைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

0
178

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று (டிச.19) டெல்லிக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், விரைந்து நிதி ஒதுக்கக் கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசித்தார்.

தொடர்ந்து மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்து, அப்பாதிப்புகளை சீரமமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என கோரி பிரதமரிடம் மனு அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here