மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்.. கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்…

0
181

தமிழர் திருநாளான தைப்பொங்கல் முதல் தினத்தில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பொங்கல் படையலிட்டு அனைவரும் வணங்கினர். அதனைத் தொடர்ந்து 2ஆம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

விவசாயிகளின் நண்பன், உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் வகையில் கால்நடைகளுக்கு விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே இந்த மாட்டும் பொங்கல்.

அதன்படி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மாட்டுப் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மேலும், மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து, கால்நடைகளை குளிப்பாட்டினர்.

தொடர்ந்து மாடுகளின் கொம்புகளை சீவி, வர்ணங்கள் பூசி கால்நடைகளுக்கு அழகு சேர்த்தனர். பின்னர், சாமி தரிசனம் செய்துவிட்டு கால்நடைகளுக்கு திருநீர், குங்குமம் இட்டு கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்து வணங்கினர்.

வழிபாடு செய்த பின்னர், மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் உள்ளிட்டவற்றை கொடுத்து பொங்கல் பண்டிகையை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here