மிக்ஜாம் புயல்: ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூரி..! நன்றி தெரிவித்த உதயநிதி!

0
175

சென்னை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக நடிகர் சூரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதி வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு, தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் முதலமைச்சர் கூறியிருந்தார்.

மேலும், அனைத்து சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார். அதன்படி, அனைத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ் திரைத்துறை பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் முதலமைச்சர் பொது நிவாரண நிதி கொடுத்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சூரி தனது மதுரை அம்மன் உணவகம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதியிடம் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மிக்ஜாம் புயல் – கன மழை நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கின்ற வகையில், சமூக அக்கறையுடன் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், திரைப்பட நடிகர் சகோதரர் சூரி மற்றும் மதுரை அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்” எனப் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here