முதலமைச்சர் நிவாரண நிதி: தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சார்பில் ரூ.18 லட்சம் வழங்கல்!

0
122

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர். அதிலிருந்து மக்களை மீட்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை நிவாரண நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இதற்கு, நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மிக்ஜாம் புயல் பேரிடர் மற்றும் தென் மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு பல்வேறு தரப்பினர் பொதுநலத்துடன் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சகோதரர்
செல்வப்பெருந்தகை தலைமையில், காங்கிரசின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் ரூ.18 லட்சத்திற்கான காசோலையை ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு இன்று நம்மிடம் வழங்கினர். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here