முதலமைச்சர் பொது நிவாரண நிதி: ரூ.2,51,000 வழங்கிய மதுரை மாவட்ட திமுக கழகம்!

0
145

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட மதுரை மாவட்டக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட – பகுதி – வட்ட – கிளைக்கழக நிர்வாகிகள், இளைஞரணி உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகள், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2,51,000 வழங்கியுள்ளனர்.

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர். அதிலிருந்து மக்களை மீட்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்டக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட – பகுதி – வட்ட – கிளைக்கழக நிர்வாகிகள், இளைஞரணி உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகள் அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மிக்ஜாம் புயல் – வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நம் தி.மு.கழக அரசிற்கு பக்கபலமாக நிதியளித்துவோரின் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திட மதுரை மாநகர் மாவட்டக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட – பகுதி – வட்ட – கிளைக்கழக நிர்வாகிகள், இளைஞரணி உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகள் 30 பேர் மற்றும் சென்னை மீனம்பாக்கத்தைச் சேர்ந்த நால்வர் என 34 பேர் மொத்தம் ரூ.2,51,000-ஐ வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று வழங்கினர். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here