முதலமைச்சர் பொது நிவாரண நிதி: ரூ.15 லட்சம் வழங்கிய ‘டிமான்டி காலனி 2’ படக்குழு..!

0
93

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ‘டிமான்டி காலனி 2’ படக்குழுவினர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளனர்.

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர். அதிலிருந்து மக்களை மீட்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று ‘டிமான்டி காலனி 2’ படக்குழுவினர் அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் உருவான பாதிப்புகளை துடைத்தெறியும் பணியில் கழக அரசு மும்முரமாக
செயல்பட்டு வருகிறது. கழக அரசின் இப்பணிகளுக்கு பலரும் பங்களிப்பும் செய்து வருகின்றனர்.

அந்தப் பணிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், ‘டிமான்டி காலனி 2’ திரைப்படக்குழுவின் சார்பில் அப்படத்தின் கதாநாயகனான தம்பி அருள்நிதி, தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன், இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து ரூ.15 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று நம்மிடம் வழங்கினர். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here