‘ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்’ – ஆளுநர் ரவி

0
339

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று (ஜன.17) சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர், ரெங்கநாதர் மற்றும் தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, தாயார் சன்னதிக்கு அருகே உள்ள ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “’நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது.

ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாகவே கோவில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோவில்கள் உள்ளன.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. காரணம் ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்.

கோவில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. தூய்மைப் பணிகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கோவில் மட்டுமல்ல பொது இடங்களையும் நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here