ரூ.30 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை: ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்..

0
168

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அமைந்துள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மருத்துவ சேவையாற்றி வருகிறது.

இந்த பாரம்பரியமிக்க மருத்துவமனையின் சேவையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, அந்த மருத்துவமனைக்கு அருகே கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த கட்டுமானப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (ஜன.08) நேரில் ஆய்வு செய்தனர். மேலும், இந்தப் பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here