‘ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை அரசு பள்ளிக்கு தானம் வழங்கிய பெண்’ – அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு!

0
84

மதுரை மாவட்டம் மேலூர் கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூரணம்மாள். இவர் கனரா வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பூரணம்மாளின் மகள் ஜனனி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அவருடைய நினைவாக கொடிகுளத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதற்கு தானமாக பூரணம்மாள் நிலம் வழங்கி இருக்கிறார்.

ரூ.4 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய அவரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பூரணம்மாளை பாராட்டி, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, “1.5 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு வழங்கிய பூரணம்மாளை வணங்குகிறேன்! போற்றுகிறேன்!. மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப்பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும், பூரணம்மாளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரின் மகள் மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வருகிற 29ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம்மாள் கவுரவிக்கப்பட உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here