விமான டிக்கெட்டுகளின் விலை 5 மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி..

0
113

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக, சென்னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி, வேலை காரணமாக வந்தவர்களும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பஸ், ரெயில்களில் செல்ல முன்கூட்டியே ஆயத்தமாகி விடுவார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பேருந்துகள், ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு தொடங்கியுள்ள.

இதனால், நேற்றும், இன்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. தொடர் விடுமுறை என்பதால் சென்னை விமான நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பேருந்து, ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் விமான பயணத்தை நாடியுள்ளனர்.

இந்த நிலையில், தொடர் விடுமுறை எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் விமான டிக்கெட் கட்டணங்கள் பலமடங்கு உயர்துள்ளன. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் விமானங்களில் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

சென்னை – தூத்துக்குடிக்கு வழக்கமான விமான கட்டணம் 3ஆயிரத்து 624 ரூபாயக இருந்த நிலையில் இன்று 13ஆயிரத்து 639 ரூபாயக அதிகரித்துள்ளது. அதேபோல, சென்னை – மதுரை விமான கட்டணம் 3ஆயிரத்து367 ரூபாயாக இருந்த நிலையில் 17ஆயிரத்து 262 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சென்னை – திருச்சி வழக்கமான கட்டணம் 2ஆயிரத்து 264 ரூபாயில் இருந்து 11ஆயிரத்து 369 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விமான டிக்கெட்டுகளின் விலை வழக்கத்தை விட 5 மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here