‘விளையாட்டு மைதானமும் ஒரு வகுப்பறைதான்’ – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

0
73

தமிழ்நாட்டில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின சிறப்புகளை கொண்டாடும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் நடந்த மாநில அளவிலான ‘டேக்-வான் -டோ’ போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதில், “பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின சிறப்புகளை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த தொடங்கியுள்ளோம்.

அந்த வகையில் சென்னை கல்வி மாவட்டத்தின் சார்பாக மாநில அளவிலான ‘டேக்-வான்-டோ’ போட்டிகளைத் தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம்.

‘விளையாட்டு வெறும் விளையாட்டல்ல.. விளையாட்டு மைதானமும் மாணவச் செல்வங்களுக்கான ஒரு வகுப்பறைதான்’ என்பதை எடுத்துரைத்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here