வெறும் ரூ.5-க்கு மெட்ரோவில் பயணிக்கலாம்..! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!

0
145

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாள் டிசம்பர் 3ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு அன்றைய தினம் க்யூஆர் பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி பயணித்த பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்தியேக கட்டணத்தை வழங்கியது.

ஆனால், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக அன்று மெட்ரோ பயணிகள் அதிகளவில் பயணிக்கவில்லை. இதன் காரணத்தினால் மீண்டும் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதியன்று மெட்ரோ பயணிகள் இச்சலுகையைப் பயன்படுத்தி வெறும் ரூ.5 என்ற பிரத்தியேக கட்டணத்தில் மெட்ரோவில் பயணிக்கலாம்.

மேலும், இந்த பிரத்தியேக கட்டணம் டிசம்பர் 17ஆம் தேதி மட்டுமே செல்லுபடியாகும் எனவும் இது இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு (Static QR, Mobile QR, Paytm, Whatsapp and PhonePe) மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்குப் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் ஒட்டு மொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்தியேக கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here