2023ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது.. சுப. வீரபாண்டியன் தேர்வு..

0
187

தமிழ்நாடு அரசு சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ 1995ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. மேலும், இந்த விருதை பெறுவோருக்கு 5 லட்சம் ரூபாய் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

அதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ வழங்கி வருகிறது.

இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2023ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான ‘தந்தை பெரியார் விருது’-க்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டிற்கான ‘டாக்டர் அம்பேத்கர் விருது’-க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விருதுகளை வழங்கி கவுரவிக்கவுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான ‘தந்தை பெரியார் விருதினை’’ வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்த வகையில், 2023ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான ‘தந்தை பெரியார் விருது’-க்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்த வகையில், 2023ஆம் ஆண்டிற்கான ‘டாக்டர் அம்பேத்கர் விருது’-க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தபி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார்.

விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாயுடன், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும். சமூகநீதிக்கான ‘தந்தை பெரியார் விருது’ பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுப. வீரபாண்டியன் திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர், தந்தை பெரியாரின் பற்றாளர்.

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். சுப. வீரபாண்டியன் கலைமாமணி விருது பெற்றுள்ளதுடன், இதுவரை 54 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

‘டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது’ பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள பி.சண்முகம், தமிழ்நாட்டில் 32 ஆண்டுகாலமாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பணிவகித்து மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளார்.

மேலும், தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி நீதி பெற்று தந்ததில் பெரும்பங்காற்றியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here