சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 23ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வருகிற ஜனவரி 28ஆம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல இருக்கிறார்.
இந்த நிலையில் புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்புதல் அளிப்பது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.