சென்னையில் பறக்கும் ரயில் பாலம் இடிந்து விபத்து.. போலீஸ் விசாரணை..

0
169

சென்னை: வேளச்சேரி மற்றும் பரங்கிமலையை இணைக்கும் வகையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் பாலப்பணிகள் நடைபெற்று வந்தது.

அப்போது, பாலம் அமைக்கும்போது இரு தூண்களுக்கு இடையே 80 அடி நீளமுள்ள பாலத்தின் பகுதி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கு காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here