‘நாடோடிகள்’ பாணியில் நண்பனுக்காக இளம்பெண் கடத்தல்..! கூண்டோடு தூக்கிய போலீஸ்..!

0
144

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் அரி அரவிந்த் (23). இவரும், இளம்பிள்ளையை சேர்ந்த கல்லூரி மாணவி பிரகதீஷ்வரியும் (21) காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரியவந்த நிலையில் அரி அரவிந்தை கண்டித்துள்ளனர்.

தொடர்ந்து, பிரகதீஷ்வரிக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். அதன் பேரில் நேற்று முன்தினம் மாப்பிள்ளை வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, பெண் வீட்டார்கள் இரண்டு கார்களில் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், மாணவி வீட்டார் சென்ற கார்களை மறித்துள்ளனர். அந்த 8 பேரில் 7 பேர் மட்டும் முகமூடி அனிந்துள்ளனர். அரி அரவிந்த் மட்டும் முகமூடி அனியாமல் இருந்துள்ளார்.

பின்னர், இரண்டு கார்களையும் அடித்து நொறுக்கிவிட்டு, காரில் இருந்தவர்களையும் சரமாரியாக தாக்கிவிட்டு மாணவியை தூக்கிச் சென்றனர். இதனைத் தடுக்க முயன்ற மாணவியின் தங்கையை பயங்கராமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காயமடைந்த மாணவியின் தங்கை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

தொடர்ந்து, மாணவியை கடத்திய அரி அரவிந்தனின் நண்பர்கள் 7 பேரையும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்ளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், தனது நண்பர் அரி அரவிந்த் காதலிக்கும் பெண்ணிற்கு நிச்சயதார்த்தல் என்று கூறியதால் அந்த பெண்ணை கடத்த முடிவு செய்தோம் என வாக்குமூலம் அளித்தனர்.

பின்னர், நண்பர்கள் உதவியுடன் இருவரும் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இருந்தபோதிலும், அரி அரவ்ந்த் மற்றும் பிரகதீஷ்வரி ஆகியோர் எங்கு உள்ளனர் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமுத்திரகனியின் ‘நாடோடிகள்’ பட பாணியில் நண்பன் காதலித்த பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்து வைத்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here