‘இந்தியர்கள் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி’ – நடிகர் அர்ஜுன்!

0
94

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று 22ஆம் தேதி நடைற்று வருகிறது. இந்த கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு முக்கிய பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் அயோத்தியில் இருக்கின்றனர். கோவிலுக்குள் நுழைய உரிய அனுமதி சீட்டுகளோடு இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராமர் கோவில் குறித்து நடிகர் அர்ஜூன் வீடியோ இன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 500 ஆண்டு காலமாக இந்த ராமர் கோவிலுக்காக பல்வேறு உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளதாக கூறி நெகிழ்ச்சி அடைந்தார்.

இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு தருணமாக இது இருக்கிறது. இதற்கு காரணமாக இருக்கின்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளில் நடிகர் அர்ஜுன் பங்கேற்கிறாரா? இல்லையா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு முன்னிட்டு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராமர் கோவில் திறப்பு விழா: ‘ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here