உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம்தான் ‘புளூ ஸ்டார்’ – நடிகர் சாந்தனு..!

0
133

இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘புளூ ஸ்டார்’. இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படம் உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது.

இந்த நிலையில், இந்த படம் குறித்து நடிகர் சாந்தனு தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சக்கரகட்டி முதல் புளூ ஸ்டார் வரையிலான இந்த பயணம் எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. பல்வேறு விதமான உணர்வுகளையும் கொடுத்துள்ளது.

வாழ்க்கையில் பல மறக்க முடியாத நினைவுகளையும் கொடுத்துள்ளது. இனி எப்பொழுதும் பாசிடிவிட்டி தான். உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம்தான் புளூ ஸ்டார்.

இன்று முதல் உலகமெங்கும் வெளியாகிறது. சென்று பாருங்கள்… உங்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும்; ஜெய்க்கிறோம்” என பதிவிட்டு உள்ளார். மேலும், ‘புளூ ஸ்டார்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here