‘ஒரு கண்ணில் துணிச்சல், மறு கண்ணில் கருணை’ – விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவித்த சூர்யா!

0
117

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (டிச.28) காலை 6:10 மணிக்கு அவர் காலமானார். அவரது இறப்புக்கு அரசியல்வாதிகளும், திரைத்துறை துறையினரும் அஞ்சலி செலுத்தி தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா தனது ‘X’ தளத்தில் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை, யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “அண்ணன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு மனதுக்கு அவ்வளவு வருத்தமாக இருக்கிறது. ஒரு கண்ணில் துணிச்சலும் மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அபூர்வ கலைஞர்.

கடைக்கோடி மக்கள் வரை எல்லாருக்கும் எல்லா உதவியும் செஞ்சு புரட்சிக் கலைஞனாய், கேப்டனாய் நம் எல்லார் மனசுலயும் இடம்பிடிச்சவர். அண்ணன் விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கறேன். அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்’ – நடிகர் சூரி இரங்கல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here