Actor Vishal: நடிகர் வைபவ் தற்போது ஷெரிஃப் இயக்கத்தில் ‘ரணம் அறம் தவறேல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவுடன் இணைந்து தான்யா ஹோப் மற்றும் நந்திதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அரோல் கொரெல்லி இசையமைக்கிறார். சமீபத்தில் ‘ரணம்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி ‘ரணம்’ படம் ரிலீஸானது. தொடர்ந்து இந்த படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கொடுத்து வருகின்றனர். நாளுக்கு நாள் திரையரங்குகளில் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரணம் படம் குறித்து நடிகர் விஷால் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ரணம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அன்பு சகோதரர் வைபவ்விற்கு வாழ்த்துகள். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஆக்ஷன் திரில்லராக வெளியான இந்த ‘ரணம்’ படத்திற்கு மக்கள் பெரிய அளவு வரவேற்பு கொடுத்துள்ளனர். தொடர்ந்து ரசிகர்கள் தங்களது ஆதரவை இந்த படத்திற்கு கொடுத்து வருகின்றனர்.