விஷ்ணு விஷால் புதிய படத்தின் அப்டேட்.. இயக்குநர் யார் தெரியுமா?..

0
125

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்தார். 2022ஆம் வெளியான இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பின் காரணமாக ரூ.30 கோடிக்கும் வசூல் செய்தது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்துள்ளார். இந்த படத்தையும் விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார்.

இந்தப் படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here