திருப்பதியில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்..!

0
114

நடிகை ஸ்ரேயா தமிழ் சினிமாவில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்தப் படத்தை தொடர்ந்து ‘மழை’, ‘கந்தசாமி’, ‘சிவாஜி’, ‘குட்டி’, ‘அழகிய தமிழ் மகன்’ என தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் நடந்தது. தொடர்ந்து அவருக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. அதன் பின்னர் சினிமாவில் இருந்து சற்று விழகியிருந்த அவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்.

இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது தாயாருன் சாமி தரிசனம் செய்துள்ளார். திருமலைக்கு சென்ற அவரை அதிகாரிகள் வரவேற்று விஐபி பிரேக் தரிசனத்தில் அழைத்துச் சென்று சாமி தரிசன ஏற்பாடுகளை செய்ய ஏற்பாடு செய்தனர்.

கோவிலுக்குள் சென்ற நடிகை ஸ்ரேயா மற்றும் அவரின் தாயார் நீரஜா ஆகியோர் மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ரெங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் வழங்கினர். தொடர்ந்து வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர்.

இதையும் படிங்க: ‘இந்தியர்கள் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி’ – நடிகர் அர்ஜுன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here